கூலி தொழிலாளி பலி
சாத்துார்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் மாரிமுத்து, 30. கூலி தொழிலாளி அக்.31 ல்  மடத்துப் பட்டியில் இரவு 8:00 மணிக்கு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். டூ வீலரில் கிளம்பி கடையை விட்டு சில அடி துாரம் வந்த போது  கால் செயல் இழந்து சாலை ஓரம் விழுந்து பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம் பெண் மாயம்
சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டியை சேர்ந்தவர் செல்லத்தாய். 47. இவர் மகள் சங்கீத பிரியா, 21. பட்டாசு தொழிலாளி .அக்.31 வீட்டில் இருந்தவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் கைது
சாத்துார்: சாத்துார் வல்லம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 70.சுடுகாட்டு பகுதியில் மது பாட்டில் விற்றார்.அவரிடம் இருந்து 650 மி.லி.,மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

