/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாக்டர் ராஜசேகருக்கு மவுன ஊர்வலம்
/
டாக்டர் ராஜசேகருக்கு மவுன ஊர்வலம்
ADDED : நவ 02, 2025 11:57 PM

ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் டாக்டர் ராஜசேகர் மறைவிற்கு பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் ராஜசேகர் 64, இவரது தந்தை கோபாலகிருஷ்ணன், சகோதரர் சங்கர் ராமன் இருவரும் டாக்டர்கள்.
இரண்டு தலைமுறைகளாக குறைந்த கட்டணத்தில் சிகிச்சையும், ஏழை எளியோருக்கு கட்டணம் இன்றியும் சிகிச்சை அளித்ததுடன் தற்போது வரை 50 ரூபாய் மட்டும் ஆலோசனை கட்டணம் அதில் ஊசி, மாத்திரை என வழங்கி அனைத்து மக்களின் அன்பையும் பெற்று மக்களின் மருத்துவர் என பெயர் பெற்றார்.
இந்நிலையில் டாக்டர் ராஜசேகர் அக். 25ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பில் அமைதி ஊர்வலம் ஊர்வலம் நடத்தப்பட்டது.
நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட அவரது படம் ஏந்திய வாகனம் முன் செல்ல ஜவகர் மைதானத்தில் தொடங்கி ரயில்வே மேம்பாலம் வழியே அவரது இல்லத்தில் அமைதி ஊர்வலம் முடிந்தது. நகரின் பல்வேறு கட்சிபிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

