நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் பலி சாத்துார்: ஆலங்குளம் கீழாண்மறைநாடு சின்ன முனியாண்டி 66, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) செவல் பட்டிக்கு சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு தொழிலாளி பலி சாத்துார்: வெம்பக்கோட்டை டி.ராமலிங்கபுரம் சங்கரப்பன் மகன் விஜயகுமார், 58.பட்டாசு தொழிலாளி. இவரது மது பழக்கத்தை கண்டித்து மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றனர். நவ.4 வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

