/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : மார் 17, 2024 12:13 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் சொந்த கட்டடம் இல்லாமல், வாடகை கட்டத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கான அலுவலகம் தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு மாவட்டத்தில் நடக்கும் பொருளாதார குற்ற வழக்குகள் மீதான புகார்கள் பெறப்பட்டு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்த அலுவலக வரவேற்பாளர் அமருவதற்கு கூட போதிய இட வசதி இல்லாமல் இட நெருக்கடி நிலவுகிறது. இதனால் கட்டடத்தின் முன்பு உள்ள பார்க்கிங் ஏரியாவில் டேபிள், நாற்கலி போட்டு அமர்ந்துள்ளனர். இந்த அலுவலகம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அலுவலக கோப்புகள் வைப்பதற்கு கூட இடமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல ஏக்கர் நிலங்கள் காலியாக உள்ள நிலையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு தனி அலுவலகத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

