/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
5.19 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு
/
5.19 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு
ADDED : ஜன 09, 2024 12:41 AM
விருதுநகர், : கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: தைப் பொங்கலுக்கு அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ரூ.ஆயிரம் ரொக்கப்பணம் ரேஷன் கடைகளில் நாளை (ஜன. 10) முதல் வழங்கப்படுகிறது.
மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் ஆகியோருக்கு இத்தொகுப்பு கிடையாது.
மாவட்டத்தில் 6 லட்சத்து ஆயிரத்து 40 அரிசி கார்டுதாரர்களில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 400 கார்டுதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1967, 04562 -252397, 1800-42 5-5901என்ற எண்ணிற்கு அலுவலக வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம்.
மேலும் ராஜபாளையம் 94450 00357, ஸ்ரீவில்லிபுத்துார் 94450 00358, வத்திராயிருப்பு 94874 21385, சிவகாசி 94450 00359, சாத்துார் 94450 00360, வெம்பக்கோட்டை 80726 88856, விருதுநகர் 94450 00354, அருப்புக்கோட்டை 94450 00355, காரியாபட்டி 94450 00361, திருச்சுழி 94450 00356என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.