/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் பானை, தட்டுகள் கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் பானை, தட்டுகள் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் பானை, தட்டுகள் கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் பானை, தட்டுகள் கண்டெடுப்பு
ADDED : டிச 27, 2024 02:26 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், வட்டச்சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 2,900 பொருட்கள் கிடைத்தன. தற்போது சுடுமண்ணால் ஆன முழுமையான பானைகள், தட்டுகள் கிடைத்துள்ளன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''முன்னோர்கள் இப்பகுதியில் தொழிற்கூடங்கள் நடத்தி வாணிபத்தில் ஈடுபட்டதற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. முழுமையான பானைகள், தட்டுகள் தற்போது கிடைத்துள்ளன. இவை சமைப்பதற்கு, சாப்பிடுவதற்கு பயன்பட்டுள்ளன,'' என்றார்.