/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராம நாமம் சொல்வதனால் பிரார்த்தனைகள் நிறைவேறும்
/
ராம நாமம் சொல்வதனால் பிரார்த்தனைகள் நிறைவேறும்
ADDED : பிப் 04, 2024 04:42 AM

சிவகாசி : ராம நாமம் சொல்வதனால் நமது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என சிவகாசியில் நடந்த ஸத்ஸங்கம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் முரளீதர சுவாமிஜி பேசினார்.
சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன் மண்டபத்தில் காட் இந்தியா டிரஸ்ட் சார்பில் மஹாராண்யம் முரளீதர சுவாமி ஸத்ஸங்கம் நடந்தது.
அவர் பேசுகையில், இந்த கலிகாலத்தில் ஹரே ராமா ஹரே ராமா நாம சங்கீர்த்தனமே கதி. நாமா சொல்வதனால் நமது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.
தொடர்ந்து நாம மகிமையை எடுத்துக் கூறி ஸந்த் துக்காராம் கதை மூலம் விளக்கினார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்தனர்.