ADDED : அக் 09, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி உளுத்திமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ரேவதி தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் காளீஸ்வரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
வருமுன் காப்போம் திட்டம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் லஜா ஜெசிகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி, ஆய்வாளர் வீரேந்திரன் விளக்கினர். இதில் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டன. கண், பல், இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

