ADDED : செப் 07, 2026 09:53 PM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்காக செப்.
11 காலை 10:00 மணி முதல் 2:.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், பாலவநத்தம், ஜெய்சாய்ராம் கலை, அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. இதில் எலிவேட் டிஜி டெக்னாலஜி, அடையார் ஆனந்தபவன், டிவிஎஸ் சுந்தரம், செபாஸ் மெடிகல், தேவேந்திரன் பிளாஸ்டிக்ஸ், பீமா ஜூவல்லரி போன்ற 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். இம் முகாமில் பங்கேற்கும் முன் www.tnprivatejobs.tn.gov.in (தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்) என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சான்று நகல்களுடன் பங்கேற்கலாம், என்றார்.
