நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அன்னை கதீஜா கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் ரிஸ்வானுல்லா தலைமை வகித்தார். ம.ஜ.க., மாவட்ட செயலாளர் கண்மணி காதர் முன்னிலை வகித்தார்.
சுற்று வட்டார பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற 40 இஸ்லாமிய மாணவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். ராஜபாளையம் வட்டார பள்ளிவாசல் தலைமை இமாம்கள், பெற்றோர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.