தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பிரச்னையும் தீர்வும் காரியாபட்டியில் நிரந்தர பஸ் டிப்போக்கு எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஊழியர்கள்

பிரச்னையும் தீர்வும் காரியாபட்டியில் நிரந்தர பஸ் டிப்போக்கு எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஊழியர்கள்

பிரச்னையும் தீர்வும் காரியாபட்டியில் நிரந்தர பஸ் டிப்போக்கு எதிர்பார்ப்பு அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஊழியர்கள்


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி: வாடகை இடத்தில் இயங்கும் காரியாபட்டி பஸ் டிப்போவில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நிரந்தர பஸ் டிப்போ அமைக்க ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

காரியாபட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் தனியார் இடத்தில் வாடகைக்கு, தற்காலிக பஸ் டிப்போ அமைக்கப்பட்டது. அதற்குப்பின் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டு அப்போதைய முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் 7 இடங்களில் நிரந்தர பஸ் டிப்போ அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் மற்ற 6 இடங்களில் நிரந்தர பஸ் டிப்போ அமைக்கப்பட்ட நிலையில், காரியாபட்டியில் மட்டும் நிரந்தர பஸ் டிப்போ அமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அப்போது நிரந்தர பஸ் டிப்போ ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை வாடகை இடத்தில் இயங்கி வருவதால் அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. டீசல் நிரப்ப, உதிரி பாகங்கள் வாங்க மற்ற டிப்போக்களை நாட வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கூடுதல் செலவு ஏற்படுவதுடன் உரிய நேரத்திற்கு பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மழை நேரங்களில் டிப்போவுக்குள் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக படுமோசமாக இருந்து வருகிறது. ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர்.

காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் இருந்தும் அதனை கையகப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இனியும் காலதாமதப்படுத்தாமல் நிரந்தர பஸ் டிப்போ அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிப்போவை காலி செய்ய முடிவா

பாஸ்கரன், சமூக ஆர்வலர்.

காரியாபட்டியில் நிரந்தர பஸ் டிப்போ அமைப்பதை அரசியல்வாதிகளும், சரி அதிகாரிகளும் சரி கண்டும் காணாமல் இருப்பதை பார்க்கும் போது, இங்கு இருக்கும் டிப்போவை காலி செய்து, வேறு ஊருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் உள்ளது. காரியாபட்டி வளர்ந்து வரும் ஊர். மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் இருப்பதால், போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு நிரந்தர பஸ் டிப்போ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலட்சிய அதிகாரிகள்

திருமலை, சமூக ஆர்வலர்.

நிரந்தர பஸ் டிப்போ அமைக்க போதிய இடம் இல்லை என்கிற தகவலை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தட்டிக் கழிக்கின்றனர். காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதனை ஆய்வு செய்து நிரந்தர பஸ் டிப்போ அமைக்கலாம். அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. மாற்று ஊருக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

தீர்வு:

சுற்றி உள்ள கிராமங்களுக்கு காரியாபட்டி டிப்போவிலிருந்து இயக்குவது எளிதானது. டிப்போவை மாற்று ஊரில் அமைக்கும் பட்சத்தில் காரியாபட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் செலவு அதிகமாகும். ஏற்கனவே இலவச பயணத்தால் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதில் கூடுதல் செலவு செய்வது என்பது தேவையில்லாதது. இப்பிரச்னைக்கு தீர்வு காண காரியாபட்டியில் நிரந்தர டிப்போ அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us