/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை கொட்டுவதை தடுக்க போட்ட வேலி விவசாய நிலங்களுக்கான பாதைக்கு சிக்கல்
/
குப்பை கொட்டுவதை தடுக்க போட்ட வேலி விவசாய நிலங்களுக்கான பாதைக்கு சிக்கல்
குப்பை கொட்டுவதை தடுக்க போட்ட வேலி விவசாய நிலங்களுக்கான பாதைக்கு சிக்கல்
குப்பை கொட்டுவதை தடுக்க போட்ட வேலி விவசாய நிலங்களுக்கான பாதைக்கு சிக்கல்
ADDED : பிப் 10, 2025 04:20 AM
ராஜபாளையம்: முடங்கியாற்று பாலம் அருகே வேலி அமைத்துள்ளதால் விவசாய விளை நிலங்களுக்கான பாதை தடை பட்டுள்ளதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் முடங்கியாறு பாலம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு இருந்தது.
பல்வேறு தரப்பிலிருந்து மாமிச, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு இதிலிருந்து வழியும் திட கழிவுகள் முடங்கியாற்று நீரில் கலந்து சுகாதார கேடு ஏற்படுத்தி வந்தது.
தொடர்ந்து குப்பை குவிந்ததால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
இதனால் இப்பகுதிக்கு அடுத்து குத்தபாஞ்சான் ஓடை இடையே மற்றும் மருங்கூர் கண்மாய் முன்பு வரை 400 ஏக்கருக்கும் அதிகமாக விவசாய நிலங்கள் மா, தென்னந்தோப்புகள் வேலி அமைத்ததால் தங்கள் விளைநிலங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.
விளை நிலங்களுடன் 100 ஆண்டு பழமையான சமுதாய வழிபாட்டு தலம், விவசாய பகுதிகளுக்கு செல்ல முடியாததால் என குத்த பாஞ்சான் நீர்வழி பயன்பாட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முத்துக்குமார், விவசாயி: ஏற்கனவே இப்பாதை வழியே இரண்டு ஓடையில் இறங்கிதான் விவசாயப் பகுதிகளுக்கு சென்று வந்தோம்.
திடீரென முழுவதும் அடைத்து விட்டதால் மாற்றுப்பாதைக்கு வழியில்லை.
எங்கள் செலவிலேயே பாதை அமைத்து பூட்டு போட்டு பாதையை பராமரிக்க அனுமதி கேட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

