/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு
/
54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு
ADDED : நவ 17, 2024 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஹிந்து சமய அறநிலைத்துறையில் நேற்று முன்தினம் 23 ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் உதவி ஆணையர் அலுவலகங்களில் உதவியாளர்களாக பணிபுரியும் 54 பேருக்கு கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பலர் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தேனி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, நாமக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களில் பணிபுரியும் சிலர் திருச்சி, புதுக்கோட்டை, பழநி, அரியலூர், சென்னை போன்ற தொலைதூர மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.