/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலமுறை ஊதியம் கேட்டு ஆக. 23ல் மக்கள் நலப்பணியாளர் மாநில மாநாடு
/
காலமுறை ஊதியம் கேட்டு ஆக. 23ல் மக்கள் நலப்பணியாளர் மாநில மாநாடு
காலமுறை ஊதியம் கேட்டு ஆக. 23ல் மக்கள் நலப்பணியாளர் மாநில மாநாடு
காலமுறை ஊதியம் கேட்டு ஆக. 23ல் மக்கள் நலப்பணியாளர் மாநில மாநாடு
ADDED : ஆக 15, 2025 11:26 PM

விருதுநகர்:'' ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள், மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி திருச்சியில் ஆக. 23ல் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது '' என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் 10,436 செயலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் கீழ் பணிபுரியும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு 2009 ஜூன் 1 முதல் அரசாணை எண் 234ன் படி வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும்வழங்க வேண்டும்.
நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு பணி நிரந்தம் செய்ய அரசாணை வெளியிட்டும் தற்போது வரை நிரந்தரம் செய்யவில்லை.
66 ஆயிரத்து 250 துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார, மாவட்ட அளவில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை இயக்கும் ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களை பணி வரன்முறைப்படுத்தி, காலமுறை ஊதியம், மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், பணிக்கொடை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். அனைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி பிரதி மாதம் கடைசி வேலைநாளில் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு ஆக. 23ல் நடக்கிறது என்றார்.