/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூக்குழி திருவிழா முகூர்த்த கால்நடுவிழா
/
பூக்குழி திருவிழா முகூர்த்த கால்நடுவிழா
ADDED : பிப் 12, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுவிழா நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 28ல் கொடியேற்றமும், ஏப். 8ல் பூக்குழி திருவிழாவும் நடக்கிறது. இதற்கான முகூர்த்த கால் நடுவிழா நேற்று காலை 9:45 மணிக்கு மேல் கோயிலில் துவங்கியது. கோயிலில் அம்மனுக்கு செய்யப்பட்டு முகூர்த்தக்கால், மாரியம்மன் கோயில் தெரு வீதிகளில் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்த கால் நடப்பட்டது. நகராட்சித் தலைவர் ரவி கண்ணன், மண்டகப்படிதாரர்கள், செயல் அலுவலர் சத்திய நாராயணன், பூசாரி சுந்தர் பங்கேற்றனர்.