/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
4 ஆண்டுகளுக்கு பின் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

ADDED : ஜூலை 24, 2025 06:41 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதியில் நான்கு ஆண்டு களுக்குப் பின் மழை நீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் முறையாக மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதை கவனிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளுடன் 1.30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. இதன் பிரதான மழை நீர் வடிகால் பகுதியாக சஞ்சீவி மலையில் இருந்து உற்பத்தியாகும் கால்வாய் இருந்து வருகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லும் இம்மழை நீர் வடிகால் முறையாக சுத்தம் செய்யப்படாமல் அடைப்பு ஏற்பட்டது.
இதில் பிளாஸ்டிக் கழிவுகள் வணிக நிறுவனங் களின் கழிவுகள் முறைப்படி வெளியேற்றப்படாமல் மழைநீர் வடிகால்களில் கொட்டப்பட்டது.
இதனால் மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவு நீர் பெருக்கெடுக்கும் நிலை இருந்தது.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீவில்லிபுத்துார் வழி தேசிய நெடுஞ்சாலை, முடங்கியார் ரோடு பகுதிகளில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
இதுகுறித்து செல்வம்: தற்போது நகராட்சியில் பாதாள சாக்கடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் குடியிருப்பு வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுகள் வடிகாலில் சேர்வது நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே மழை நீர் வடிகாலில் தேவையற்ற கழிவுகள் சேர்வதை கண்காணித்தால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் நிறைவடைந்து பாசன கண்மாய்களுக்கு சுத்தமான நீர் சென்று சேகரமாகும், என்றார்.