ADDED : ஜன 18, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் பிரிவு சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ் மன்ற விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார்.
நிர்வாக இயக்குனர்கள் நிர்மலா ராஜு, ஸ்ரீகண்டன் ராஜா, ராமராஜூ சர்ஜிகல் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிஷன் இயக்குனர் மோகன ரெங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. ராம்கோ டெக்ஸ்டைல் துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன் வரவேற்றார். தொழிற்சங்க தலைவர்கள் என்.கண்ணன், ஆர்.கண்ணன், விஜயன், வைரமுத்து வாழ்த்தினர்.