/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்தல் தாராளம்
/
அருப்புக்கோட்டையில் டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்தல் தாராளம்
அருப்புக்கோட்டையில் டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்தல் தாராளம்
அருப்புக்கோட்டையில் டூவீலர்களில் ரேஷன் அரிசி கடத்தல் தாராளம்
ADDED : பிப் 17, 2025 05:03 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ரேஷன் அரிசி டூவீலர்களில் கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வருவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டை தாலுகாவில் 110 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, சீனி, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு கார்டிற்கு 18 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, பாமாயில் ஒரு லிட்டர், 2 கிலோ சீனி உட்பட பொருட்களும், முன்னுரிமை கார்டுகளுக்கு 35 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை பெரும்பாலும் மக்கள் உபயோகப்படுத்துவது இல்லை. இன்னும் சிலர் அரிசியை வாங்குவதில்லை. அரிசியை வாங்கியவர்கள் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்குபவர்களிலும் கிலோ 3 ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். ரேஷன் கடைகளிலும் முழுமையாக அரிசி வினியோகம் செய்வது இல்லை. பாதி கார்டுதாரர்களுக்கு ஸ்டாக் இல்லை என்ற பதிலை கூறி விடுகின்றனர்.
மீதமுள்ள அரிசி டூவீலர்களின் மூலம் கடத்தப்படுகிறது. அருப்புக்கோட்டையில் வெள்ளக்கோட்டை, திருச்சுழி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டூவீலர்களில் அரிசி கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. கிராமப்புறங்களில் வாகனத்தில் சென்று விலை கொடுத்து ரேஷன் அரிசியை வாங்கி கடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

