/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொங்கலாபுரத்தில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
/
கொங்கலாபுரத்தில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
கொங்கலாபுரத்தில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
கொங்கலாபுரத்தில் கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
ADDED : ஜூலை 22, 2025 03:22 AM

சிவகாசி: சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறப்பு விழா காணாமல் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 700 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு ரேஷன் கடை இல்லாததால் தற்காலிகமாக தனியார் கட்டடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு ரேஷன் பொருட்களான அரிசி பருப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கு இடமில்லை. மேலும் மக்கள் இட நெருக்கடியில் மிகவும் சிரமப்பட்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இங்கு புதிதாக ஆறு மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் திறக்கப்படாததால் பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே ரேஷன் கடைக்கு என கட்டப்பட்ட கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.