/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரிசி மூடை விற்பதாக பேசிய ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
/
அரிசி மூடை விற்பதாக பேசிய ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
அரிசி மூடை விற்பதாக பேசிய ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
அரிசி மூடை விற்பதாக பேசிய ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 05, 2024 04:56 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசிஅய்யம்பட்டி ரேஷன் கடையில் விற்பனையாளர் திலகவதி, அரிசி மூடை விற்றால் தான் உதவியாளருக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்று பேசிய வீடியோ வைரலான நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ரேஷன் கடையில் விற்பனையாளர் திலகவதியிடம், அரிசி மூடையைவெளிநபர் எடுத்து செல்வது குறித்து மக்கள் கேள்வி எழுப்பிய போது, அரிசி மூடை விற்றால் தான் உதவியாளருக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றுபேசிய பேச்சு வீடியோவாக பரவி வருகிறது.
இந்த ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா நவ. 21ல் தணிக்கை செய்து கோதுமை 108 கிலோ, பாமாயில் 2 கிலோ, துவரம் பருப்பு 5 கிலோ, சர்க்கரை 7 கிலோ, செறிவூட்டப்பட்ட அரிசி 114 கிலோ இருப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ.6425 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிச. 3ல் வீடியோ வைரலான பின், சிவகாசி வருவாய் ஆய்வாளரால் கடை ஆய்வு செய்யப்பட்ட தணிக்கையில் 100 கிலோ அரிசி அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு, ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே உண்மைக்கு புறம்பாக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய வீடியோ பரவி வருவதாலும், அவர் முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாலும் விற்பனையாளர் திலகவதி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.