/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாசிப்பு அனுபவங்கள் புதிய உற்சாகத்தை தரும்
/
வாசிப்பு அனுபவங்கள் புதிய உற்சாகத்தை தரும்
ADDED : நவ 17, 2024 05:41 AM

ராஜபாளையம்: வாசிப்பு நமக்கு வளமான வாழ்வை தரும் என்பது ஆன்றோர் வாக்கு.
சாதாரண புத்தகங்களை படித்தல் என்பது வாசிப்பின் கணக்கில் வராது. பள்ளியில் பாடங்களை படித்து புரிந்து கொள்வதும், வினாக்களுக்கு விடை அளிப்பதும் இது போல தான். ஒவ்வொரு வார்த்தைகளையும் எழுத்தாளரின் எண்ண ஓட்டத்தையும் வாசிப்பவர்களுக்கு கடத்துவதோடு முழுமை பெற்ற மனிதனாக மாற்றும்.
தேர்ந்த வாசகர் என்பது புத்தகங்களை தேடித்தேடி வாசித்து இன்பமுறுவதும் அறிவுப்பசியை தீர்க்க முனைவதும் சக மனிதர்களை நேசித்து இன்பம் கொள்வதும் என தனி உலகமாக மாறி விடுகிறது. மதுரை மீனாட்சி புக் ஷாப், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.
நவ. 20 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 வரை நடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.

