/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை ரயில் மறு வழியிலும் தேவை
/
செங்கோட்டை ரயில் மறு வழியிலும் தேவை
ADDED : அக் 02, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: தாம்பரம்- - செங்கோட்டை இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு 15 பெட்டிகளுடன் செங்கோட்டை வந்தடைந்தது. இந்த ரயில் பெட்டிகள் தற்போது தென்காசி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக மறுமார்க்கத்திலும் இந்த முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.