/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பட்ட மரம் பயணிகள் அச்சம்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பட்ட மரம் பயணிகள் அச்சம்
ADDED : அக் 01, 2025 10:11 AM

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் விழும் நிலையில் உள்ள பட்ட மரத்தினால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருந்து பஸ் ஏறும் இடத்தில் 40 ஆண்டுகளுக்கு முந்தைய வேப்பமரம் உள்ளது.
நன்றாக வளர்ந்திருந்த இந்த மரம் ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுப் போக துவங்கியது. தற்போது மரம் முழுவதும் பட்டு மொட்டையாக காட்சியளிக்கிறது.
இந்த மரத்தின் அருகில் தான் பஸ்கள் காத்திருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது.
அவ்வாறு பயணிகள் காத்திருக்கும் போது பட்ட மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுந்து பயணிகளின் தலையை பதம் பார்க்கின்றது. பஸ்சிலும் விழுந்து சேதமடைய செய்கிறது.
பயணிகள் காத்திருக்கும் போது மரம் முழுமையாக கீழே விழுந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பஸ் ஸ்டாண்டில் உள்ள பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.