ADDED : ஜூலை 19, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் இ.குமாரலிங்கபுரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் பலியானதொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிவாரண நிதியை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார்.பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் நீரில் மூழ்கி மரணம் அடைந்தவர் என 18 பேருக்கு ரூ. 48.50 லட்சம் நிவாரணத் தொகை சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்,சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், ஆர்.டி.ஓ., கனகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன்இருந்தனர்.