/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுந்தரபாண்டியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சுந்தரபாண்டியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜன 22, 2025 09:26 AM

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் செங்குளம் கண்மாயின் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
ஊரின் நுழைவு பகுதியை உள்ள செங்குளம் கண்மாயில் கரையை ஒட்டி நீர்நிலை புறம்போக்கு பகுதியில் தனி நபர்கள் மண் சுவர்களாலான, 7 வீடுகளை கட்டி வசித்து வந்தனர். மேலும் பன்றிகளை அடைக்க தகர செட்டுகளையும் அமைத்திருந்தனர்.
நேற்று காலை நீர்வளத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரப்பு அகற்றும் பணி நடந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். இதற்காக அதே பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.