/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சாத்துார் சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : செப் 28, 2024 04:44 AM

சாத்துார், : சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் நேற்று அகற்றினர்.
விருதுநகர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சாத்துார் படந்தால் ஜங்ஷனில் இருந்து வைப்பாறு பாலம் வரையிலான சர்வீஸ் ரோடு இருபுறமும் ரோடு வரை ஆக்கிரமித்து கடைகள், ஓட்டல்கள் போடப்பட்டிருந்தன.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொள்ள கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
நேற்று வரை கடைக்காரர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
கிழக்கு பக்க சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமித்திருந்த கடைகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்ற துவங்கினர். இதனை தொடர்ந்து மேற்கு பக்க சர்வீஸ் ரோட்டில் இருந்த கடைக்காரர்கள் தாங்களாக முன் வந்து ஆக்கிரமித்திருந்த பகுதியில் இருந்த கூரை களை அகற்றினர்.
மேலும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள் சர்வீஸ் ரோடு வரை போட்டிருந்த சிமெண்ட் தளத்தையும் அதிகாரிகள் அகற்றினர். சர்வீஸ் ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் முற்றிலுமாக அகற்றப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.