தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு

காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு

காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு


UPDATED : அக் 28, 2026 05:50 PM

ADDED : அக் 28, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:50 PM ADDED : அக் 28, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் ஏழு நாட்கள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட், ஒன்றிய அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம், உழவர் சந்தை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள் அருகே சாலையோர கடைகள், தள்ளுவண்டிகள், கடைக்காரர்கள் ரோடு வரை ஷெட் அமைத்து ஆக்கிரமித்து உள்ளதால் அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. அத்துடன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை நடுரோட்டில் நிறுத்துவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் நிழற்குடையில் காய்கறி, பழக் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பதால் பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்க முடியவில்லை. மேலும் நுழையும் இடத்தில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பதால் பஸ்கள் எளிதில் சென்று வர முடியவில்லை.. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அறிவிப்பு நோட்டீஸ் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகள் ஷெட்டுகள், நடமாடும் கடைகள், தள்ளுவண்டிகள், சாலையோர கடைகளை தானாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் வருவாய்த்துறை, போலீசார் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us