நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சிந்தனா வரவேற்றார். கல்லுாரி தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் சந்திரசேகரன், செயலாளர் மதன் பங்கேற்றனர்.
* கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் 76 வது குடியரசு தின விழா நடந்தது.திருநெல்வேலி தேசிய மாணவர் படை 9 (டி.என்) சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி கர்னல் டி.ஆர்.டி. சின்ஹா தேசியக்கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கல்லுாரி முதல்வர் காளிதாச முருகவேல், பேராசிரியர்கள்,டீன்கள், மாணவர்கள் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

