/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான குடிநீர் தொட்டி, வாறுகால், ரோடு இல்லை விருதுநகர் சங்கரநாராயணபுரம் குடியிருப்போர் பரிதவிப்பு

ADDED : டிச 18, 2024 06:56 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே சங்கரநாராயணபுரம் பகுதியில் குடிநீர், வாறுகால், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை என மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கரநாராயணபுரம் குடியிருப்போர்களான மோகன், தெய்வேந்திரன், காத்தவராயன், ரங்கராஜன், பாலமுருகன் கூறியதாவது:
சங்கர நாராயணபுரத்தில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக மேல்நிலைக் குடிநீர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த தொட்டியை முறையாக பராமரிக்காததால் மூடி சேதமாகி விழுந்ததால் தற்போது திறந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியை முறையாக சுத்தம் செய்வதில்லை.
மேலும் பாவாலி ரோட்டில் இருந்து சங்கரநாராயணபுரத்திற்கு வரும் ரோடுகள் முழுவதும் சேதமாகி உள்ளது. இந்த ரோட்டில் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் மக்கள் அஞ்சுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு வழங்கியும் குடிநீர் வழங்கப்படவில்லை.
வீட்டின் கழிவு நீர் செல்ல 10 ஆண்டுகளை கடந்தும் வாறுகால் வசதி ஏற்படுத்தப்படாததால் மழைக்காலங்களில் ரோட்டில் ஆறாக ஓடுகிறது. தற்போது கழிவு நீர் வீடுகளுக்கு முன்பு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இங்கு வசிக்கும் மக்கள் குளிப்பதற்கு குளியல் தொட்டி இல்லை. வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் போதிய அளவில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் இரவில் நடந்து செல்லும் போது கால் இடறி விழும் நிலை தொடர்கிறது.
எனவே சங்கரநாராயணபுரத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.