/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோர திறந்தவெளி கிணறு விபத்து ஏற்படும் அபாயம்
/
ரோட்டோர திறந்தவெளி கிணறு விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 02, 2025 12:23 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரோடு அருகே திறந்தவெளி கிணறு இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கோவிலாங்குளத்தில் மெயின் ரோடு அருகே திறந்த வெளியில் பாழடைந்த கிணறு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்பட்ட கிணறு தற்போது பயன்பாடு இன்றி மூடப்படாமல் திறந்த வெளியில் உள்ளது.
இந்த வழியாகத்தான் தினமும் பள்ளி மாணவர்கள், மக்கள் டூவீலர்களில் வந்து செல்கின்றனர். கிணற்றைச் சுற்றி முட்புதர்கள் வளர்ந்த நிலையில் கிணறு மூடப்படாமல் இருப்பதால் வாகனங்கள் கால்நடைகள் உள்ளே விழும் அபாயத்தில் உள்ளது. கிணற்றை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.