ADDED : நவ 22, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் குமார் பாண்டி தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, பொதுச் செயலாளர் அம்சராஜ் பேசினர். மாநாட்டில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை கோர்ட் உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைப்பது, தனியார் மயப்படுத்துதலை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் கோபால் நன்றிகூறினார்.

