/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியிலிருந்து ஸ்ரீவி., செல்லும் கனரக வாகனங்கள் பாதை மாற்றம்
/
சிவகாசியிலிருந்து ஸ்ரீவி., செல்லும் கனரக வாகனங்கள் பாதை மாற்றம்
சிவகாசியிலிருந்து ஸ்ரீவி., செல்லும் கனரக வாகனங்கள் பாதை மாற்றம்
சிவகாசியிலிருந்து ஸ்ரீவி., செல்லும் கனரக வாகனங்கள் பாதை மாற்றம்
ADDED : அக் 06, 2024 04:50 AM
சிவகாசி : சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் கனரக வாகனங்கள் விளாம்பட்டி ரோடு பெரிய பொட்டல்பட்டி வழியாக செல்ல வேண்டும் என டி.எஸ்.பி., பாஸ்கர் அறிவுறுத்தினார்.
சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள், டிரைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற டி.எஸ்.பி., பாஸ்கர் கூறியதாவது, சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது.
இதற்காக மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் கனரக வாகனங்கள் விளாம்பட்டி ரோடு, அய்யம்பட்டி, லட்சுமியாபுரம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் செல்கின்றது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து வருகின்ற வாகனங்கள் செங்கமல நாச்சியாபுரம் ஒய்.ஆர்.டி.வி., பள்ளி வழியே நகருக்குள் வருகின்றது. நகர், புறநகர் பஸ்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள் என அனைத்து வாகனங்களும் இதே வழித்தடத்தில் வருவதால் தினமும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுகின்றது.
எனவே போக்குவரத்து பாதிப்பை குறைக்கும் வகையில் இனிமேல் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் கனரக வாகனங்கள் விளாம்பட்டி ரோடு பெரிய பொட்டல்பட்டி வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் செல்ல வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி வருகின்ற கனரக வாகனங்கள் செங்கமல நாச்சியாபுரம் திருத்தங்கல் வழியாக வரவேண்டும். சாத்துார் செல்ல வேண்டிய வாகனங்கள் ஒய்.ஆர்.டி.வி., பள்ளி வழியாகவே சென்றுவிடலாம். இதற்கு அனைத்து டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என்றார்.