/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டை சேதப்படுத்தியவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்
/
ரோட்டை சேதப்படுத்தியவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்
ADDED : செப் 26, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஐயப்பன் காலனியில் கழிவு நீர் உறிஞ்சி குழாய் அமைப்பதற்காக மாநகராட்சி அனுமதி இல்லாமல் புதிதாக போடப்பட்ட ரோட்டை ராம்குமார் சேதப்படுத்தினார். தகவல் அறிந்த கமிஷனர் சரவணன் ரோட்டை சேதப்படுத்தியவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மாரியம்மன் கோயில் அருகே பக்தர்களுக்கும், மக்களுக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பில் இருந்த ஏழு பூக்கடைகள், 3 டீக்கடைகள், ரோட்டில் போடப்பட்டிருந்த ஏணி, கோக்காலி அகற்றப்பட்டது.