ADDED : ஆக 13, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஆக. 14-
சிவகாசியில் லாரி செட்டில் பதுக்கப்பட்ட ரூ. 23 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் திருப்பதி 37, ஆனைக்குட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இருவரும் விஜயலட்சுமி காலனியில் உள்ள லாரி செட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பட்டாசுகளை பதுக்கி வைத்தனர். கிழக்கு போலீசார் 1080 பெட்டிகளில் இருந்த ரூ. 23 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
