/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலரில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு
/
டூவீலரில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு
ADDED : நவ 22, 2025 04:15 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் அருண்குமார். தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த நிதிஷ் குமாரிடம் 21, அருப்புக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கியில் தன் கணக்கில் பணம் செலுத்த 3 லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளார்.
மதியம் 3:00 மணிக்கு வங்கிக்கு வந்த நிதிஷ்குமார் வங்கியில் பணத்தை செலுத்தும் போது வங்கி அலுவலர் ஆதார் உள்ளிட்ட அதற்கான ஆவணங்கள் கேட்டுள்ளனர். உடன் வெளியில் வந்தவர் பணத்தை டூ வீலரில் டிக்கியில் வைத்து விட்டு, ஆவணங்ளை எடுத்து கொண்டு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்த பகுதிய சிசிடிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை திருடிய வரை தேடி வருகின்றனர்.

