/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாகுபடிக்கு தயாராகும் சம்பா நெல் நாற்றுகள்: விவசாயிகள் தீவிரம்
/
சாகுபடிக்கு தயாராகும் சம்பா நெல் நாற்றுகள்: விவசாயிகள் தீவிரம்
சாகுபடிக்கு தயாராகும் சம்பா நெல் நாற்றுகள்: விவசாயிகள் தீவிரம்
சாகுபடிக்கு தயாராகும் சம்பா நெல் நாற்றுகள்: விவசாயிகள் தீவிரம்
ADDED : ஆக 28, 2025 11:51 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சுற்று கிராமங்களில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு நெல் நாற்றங்கால் பாவி தயார் படுத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், அத்தி கோயில், கூமாபட்டி, ரகமத் நகர், கிழவன் கோயில், பட்டு பூச்சி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம், புதுப்பட்டி ஆகிய பகுதி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கிணறுகள், கண்மாய்களில் இருந்த தண்ணீரை நம்பி கோடை நெல் சாகுபடி முடித்துள்ள நிலையில் தற்போது பெரும்பாலான கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இருந்த போதிலும் தங்கள் வயல்களில் உள்ள கிணற்று தண்ணீரை நம்பியும், வடகிழக்கு பருவமழை கட்டாயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
இதற்காக தற்போது வத்திராயிருப்பிலிருந்து கூமாப்பட்டிக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் உள்ள வயல்களில் நிலத்தை உழுது தயார் செய்துள்ளனர். பல வயல்களில் நாற்றங்கால் பாவி தினமும் கண்காணிப்புடன் வளர்த்து வருகின்றனர்.