/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி 70 சதவீதம் நிறைவு
/
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி 70 சதவீதம் நிறைவு
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி 70 சதவீதம் நிறைவு
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி 70 சதவீதம் நிறைவு
ADDED : மே 15, 2025 12:39 AM

சிவகாசி; சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ரயில் தண்டவாளத்திற்கு மேலே பாலம் அமைப்பதற்காக கர்டர்கள்பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில்700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி ஜூலை 26ல் துவங்கியது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 தூண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டது.
ரயில்வே துறை சார்பில் அந்த பாலத்திற்கு மேலே பாலம் அமைப்பதற்காக இருபுறமும் மூன்று துாண்களைக் கொண்ட பிரம்மாண்ட பில்லர் அமைக்கும் பணி நடந்தது. துாண்களின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை தர கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளித்த பின்னர் பாலம் அமைக்கும் பணி நடந்தது.
கிழக்கு பகுதியில் உள்ள 9 துாண்களில் கான்கிரீட் பிளாக்குகள் இணைக்கப்பட்டு ரயில் தண்டவாளம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது மேற்குப் பகுதியில் பாலப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று காலை ரயில் தண்டவாளத்தின் மேல் பாலம் அமைப்பதற்காக இருபுறமும் உள்ள துாண்களை இணைக்கும் வகையில் நான்கு கார்டர்கள் பொருத்தப்பட்டது.
இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்கசாமி, உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ், உதவி பொறியாளர் முத்து முனிக்குமாரி கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. தற்போது ரயில் தண்டவாளத்திற்கு மேல் பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் சாட்சியாபுரம் ரயில்வே கேட் மூடப்படாமல் ரயில்கள் சிரமமின்றி சென்று வரும். ரயில்வே தண்டவாளத்தின் மேல் பாலம் அமைத்த பின்னர், அடுத்த துாண்களுடன் இணைக்கப்படும், என்றனர்.