வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்கா ராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். விழாவில் ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவிகளுக்கும், பாடரீதியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பொருளாளர் பால்சாமி, அரிமா சங்க தலைவர் மதுரம், செயலாளர் கூடலிங்கம், பொருளாளர் குமரேசன், நிர்வாகிகள் பொன் சுப்புராஜ், நாகலட்சுமி, கருணாகரன், துணை முதல்வர் ரஷீலா தவமணி பரிசுகள் வழங்கி பேசினர்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

