/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செகந்திராபாத் -- கொல்லம் மதுரை வழி சிறப்பு ரயில்
/
செகந்திராபாத் -- கொல்லம் மதுரை வழி சிறப்பு ரயில்
ADDED : டிச 13, 2024 03:01 AM
விருதுநகர்:சபரிமலை பக்தர்களுக்காக செகந்திராபாத் -- கொல்லம் இடையே சிறப்பு ரயில் டிச. 19, 26ல் இயக்கப்படவுள்ளது.
செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு (07175) சிறப்பு ரயில் டிச. 19, 26ல் செகந்திராபாத்தில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 6:10க்கு வந்து மூன்றாம் நாள் அதிகாலை 1:30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் டிச.21, 28 தேதிகளில் அதிகாலை 5:00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12:35க்கு வந்து மறுநாள் மதியம் 1:30 மணிக்கு செகந்திராபாத் செல்லும். மவுலா அலி, செர்லபள்ளி, நல்கொண்டா, மிரியாலகுடா, நதிகுடே, பிடுகுரல்லா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லுார், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதாச்சலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலுார் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.

