ADDED : அக் 18, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி வேளாண்மை உதவி இயக்குனர் காயத்ரிதேவி விடுத்துள்ள செய்தி குறிப்பு : திருச்சுழி வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி, பருத்தி, குதிரைவாலி, கம்பு போன்ற பயிர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூரியகாந்தி விதை கே.பி.எஸ்.எச்., 85, பருத்தி கோ- 17, குதிரைவாலி எம். டி.வி., 1, கம்பு கோ - 10, உட்பட ரகங்கள் இருப்பில் உள்ளது.
குதிரைவாலி ஒரு கிலோ 71 ரூபாய் எனவும் மானியம் 30 ரூபாய் போக 41 ரூபாய் விலையிலும், சூரியகாந்தி விதை ஒரு கிலோ 635 விலையிலும் கிடைக்கிறது. என, தெரிவிக்கிறார்.