ADDED : ஜூலை 24, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: திருச்சுழி மகளிர் போலீசார் சார்பாக இன்ஸ்பெக்டர் தென்றல் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
நரிக்குடி மருது பாண்டியர், பனையூர் அரசு மேல் நிலைப் பள்ளி, திருச்சுழி தமிழ்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும் தற்காப்பு கலையான கராத்தே, சிலம்ப பயிற்சி, பயிற்சியாளரை கொண்டு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின் 1098 குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரணியில் மக்களிடையே, பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றியும், குழந்தை திருமணத்தை தடுப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகளுக்கு சத்து உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகளிர் போலீசார் செய்தனர்.