நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பாக கருத்தரங்கம் நடந்தது.
ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுப்பது எப்படி  என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார்.  கல்லூரி செயலர் சங்கரசேகரன்,  தலைவர் மயில் ராஜன் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் செல்வம் வரவேற்றார்.  முதல்வர் ராதா, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் லஞ்சத்தை ஒழிப்பது பற்றி மாணவர்களிடம் விளக்கினார். ஏற்பாடுகளை  பேராசிரியர்கள் செய்தனர். உடற்கல்வி இயக்குனர் மதலை மணிகண்டன் நன்றி கூறினார்.

