/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்
/
சிறப்பு குழந்தைகளுக்கு உணர்வு திறன் பூங்காக்கள்
ADDED : ஆக 16, 2025 09:21 PM
விருதுநகர்:தமிழகத்தில் ஆறு மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையங்களில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த உணர்வுதிறன் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், தலா, 15 லட்சம் ரூபாய் வீதம், 90 லட்சம் ரூபாயில் டி.இ.ஐ.சி.,யில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த உணர்வு திறன் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இப்பூங்காக்களில், புலன் உணர்வு ஒலிக்கான ஒலி பலகைகள், நடைபாதைகள், ஊஞ்சல்கள், சறுக்குகள், விளையா ட்டு உபகரணங்கள் உள்ளிட்ட குழந்தைகளின் உணர்வு செயலாக்கக் கோளாறுகளை, சிகிச்சை அளித்து சரிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன. இப்பூங்காவைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, விலங்குகள் நுழைவதும் தடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் சிறப்பு குழந்தைகள், தங்கள் சூழலில் இருந்து புலன் தொடுதல், பார்வை, ஒலி, இயக்கம், உடல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு புலன்களைத் துாண்டி தகவல்களைச் செயலாக்கி, பதிலளிக்கும் திறனை வளர்த்து மேம்படுத்த உதவும் வகையில் உணர்வு ஒருங்கிணைப்பு, சிகிச்சை பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.