/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேத்துார் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
/
சேத்துார் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
சேத்துார் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
சேத்துார் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 30, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார் : சேத்துார்- மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா நேற்று தொடங்கியது.
10 நாள் விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், இளநீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழா காலங்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் அம்மன் வீதி உலா ,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்.6ல் பூக்குழி திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை தலைவர் விஜயகுமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.