/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகாலில் பாதாளசாக்கடை கழிவுநீர்: நோய் தொற்று அபாயம்
/
வாறுகாலில் பாதாளசாக்கடை கழிவுநீர்: நோய் தொற்று அபாயம்
வாறுகாலில் பாதாளசாக்கடை கழிவுநீர்: நோய் தொற்று அபாயம்
வாறுகாலில் பாதாளசாக்கடை கழிவுநீர்: நோய் தொற்று அபாயம்
ADDED : மார் 10, 2024 05:06 AM

விருதுநகர் : விருதுநகரில் பாதாளசாக்கடை கழிவுநீரை வாறுகாலில் வெளியேற்றுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் ராமமூர்த்தி ரோட்டில் நுாறு நாட்களுக்கு மேலாக பாதாளசாக்கடை பிரச்னை இருந்து வருகிறது. தீபாவளி நேரத்தின் போது ராமமூர்த்தி ரோட்டில் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு பாதாளசாக்கடை பணி செய்யப்பட்டது. அதற்கு பின்னும் அதே லைனில் வெவ்வேறு இடங்களில் இன்றும் மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த பாதாள சாக்கடை பிரச்னைக்கு 3 மாதங்கள் ஆகியும் தீர்வு எட்டப்படவில்லை. தற்போது வரை கழிவுநீர் நிரம்பும் போது பைப்லைனை வைத்து உறிஞ்சி வடிகாலில், வாறுகாலில் விட்டு வருகின்றனர்.
அந்த வாறுகால் சரி இல்லாததால் கழிவுநீர் ராமமூர்த்தி ரோட்டை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் அப்பகுதியில் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

