/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீரசோழன் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
/
வீரசோழன் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
ADDED : அக் 19, 2025 09:41 PM
நரிக்குடி: நரிக்குடி வீரசோழன் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
நரிக்குடி வீரசோழனில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். ஆடுகள், கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்யப்படும். எப் போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை சமயங்களில் ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் நடைபெறும். விருதுநகர், சிவகங்கை, ராமநாத புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், மக்கள் வாங்க விற்க வருவர். சென்ற ஆண்டு தீபாவளி சமயத்தில் ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற் பனையானது.
இந்நிலையில் திங்கட் கிழமை நடைபெறும் வாரச்சந்தையை தீபா வளியை முன்னிட்டு முன்கூட்டியே நேற்று நடத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து ரூ.2 கோடி அளவிற்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்நிலையில் காலையிலிருந்து மழை பெய்யத் துவங்கியதால் வாங்குவதற்கு ஆட்கள் வராததால் ரூ.10 லட்சத்திற்கு குறைவான ஆடுகள் விற்பனையானது.