/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் துப்பாக்கி சுடும் போட்டி
/
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் துப்பாக்கி சுடும் போட்டி
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் துப்பாக்கி சுடும் போட்டி
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் துப்பாக்கி சுடும் போட்டி
ADDED : மார் 19, 2025 06:40 AM

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி 2025 நடந்தது.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு வயது பிரிவுகளின் கீழ் 33 துப்பாக்கிச் சூடு போட்டிகள் நடத்தப்பட்டன. பிக் சைட் ஏர் ரைபிள்கள், ஏர் பிஸ்டல்கள், ஓபன் சைட் ரைபிள்களுக்கான போட்டிகள் நடந்தது.
தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் கவுரவ செயலாளர் வேல் சங்கர் நடுவராக செயல்பட்டார்.
விருதுநகர் மாவட்ட ரைபிள் கிளப், ராஜபாளையம் ரைபிள் கிளப், மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
அனைத்து போட்டிகளும் தமிழ்நாடு துப்பாக்கி சூடு சங்கத்தில் பதிவு செய்யப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார்.
துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் கிஷோர் பேசினார். 51 பதக்கங்கள் வழங்கப்பட்டன.