/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிசான் திட்டத்தில் பணம் வந்ததாக குறுந்தகவல்
/
கிசான் திட்டத்தில் பணம் வந்ததாக குறுந்தகவல்
ADDED : மார் 14, 2024 02:52 AM
காரியாபட்டி: பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ. 2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதாக வந்த குறுந்தகவலையடுத்து, வங்கி கணக்கில் வரவாகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை ரூ. 2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 16வது தவணையாக ரூ. 2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
காரியாபட்டி பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது. வங்கி கணக்கை சரிபார்க்கும் போது கணக்கில் பணம் இல்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். வேளாண் துறை அலுவலர்களை கேட்டபோது, அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு வராததற்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.
இது விவசாயிகளிடத்தில் பெறும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பணம் வராததற்கான காரணத்தை தெளிவுபடுத்தி, உடனடியாக வரவாகாதவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

