
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வத்திராயிருப்பு, அக்ரஹாரம் நடுத்தெரு, ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம நவமி உற்ஸவம் நடந்தது.
தினமும் மாலை மாதர் மண்டலியர் சார்பில் அஷ்டபதி பஜனை நடந்தது. மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் மடத்து சிஷ்யர்கள் பஜனை முறைப்படி சீதா கல்யாணம் நடத்தினர். 1892ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த உற்ஸவம் கொண்டாடப்படுகிறது.
ஏற்பாடுகளை சங்கரநாராயணன், ராமச்சந்திரன், ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பக்தர்கள் செய்தனர். பீமாராவ் கண்ணன் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.