/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு தரும் சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ்
/
தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு தரும் சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ்
தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு தரும் சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ்
தன்னம்பிக்கை, வேலை வாய்ப்பு தரும் சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ்
ADDED : அக் 01, 2025 12:07 AM
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் கூறியதாவது:
கிராமப்புற பெண்களுக்கு கல்வி வழங்கும் பணியை சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி சிறப்பாக செய்து வருகிறது. மாணவிகளுக்கு கல்வி அறிவை அளிப்பதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், வேலை வாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்களாகவும், சுயதொழில் துவங்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வார்த்து எடுப்பதில் முதன்மை பெற்ற கல்லுாரியாகவும் திகழ்கிறது.
1968 ல் தொடங்கப்பட்ட இக்கல்லுாரி தேசியத் தர நிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் 'A+' தரம் பெற்ற கல்லுாரியாக, 'யுஜிசி பரமார்ஷ்' திட்டத்தின் கீழ் வழிகாட்டும் நிறுவனமாகத் தகுதி பெற்று மிளிர்கிறது.
மாநில அளவில் 2ம் இட மஞ்சப்பை விருது 2024 விருதை பெற்று ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளது. உலக நிறுவனத் தரவரிசையில் இருந்து 2025 ல் ஆண்டில் ஓ.பி.இ., தரவரிசையில் டைட்டானியம் பேண்ட் 2025ஐ பெற்றது.
தற்போது 23 இளங்கலைப் பாடப்பிரிவுகள், 13 முதுகலைப் பாடப்பிரிவுகள், 8 ஆய்வுத்துறைகள், 35 சான்றிதழ் படிப்புகள், 7 பட்டயப் படிப்புகள், 14 YWED பிரிவுகள், 16 ஸ்கில் டெவலப்மென்ட் பிரிவுகளுடன் மாணவியர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இதே கல்லுாரியில் இளங்கலை முடித்து முதுகலை சேரும் போது நிறுவனத்தின் வாயிலாக முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தொகையில் 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
பயோ டெக்னாலஜி, நியூட்ரிஷியன், பேஷன் டெக்னாலஜி, பேங்கிங் டெக்னாலஜி என்பது போன்ற வேலைவாய்ப்பினை வழங்கும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. டேட்டா சயின்ஸ், புவியியல் பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.